
சென்னை,
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதல்-மந்திரிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதல்-மந்திரிகள், மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய 3 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கின்றனர் என்றும் கர்நாடகா சார்பில் துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்கிறார் என்று திமுக திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.
பங்கேற்பவர்களின் விவரம்:-
கேரளா:-
பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்
மார்க்சிஸ்ட் கோவிந்தம் (சிபிஎம்)
பினோய் விஸ்வம், முன்னாள் எம்.பி (சிபிஎம்)
கும்பகுடி சுதாகரன் (காங்கிரஸ்)
பி.ஜே. ஜோசப், கேரள எம்.எல்.ஏ (கேரளா காங்கிரஸ்)
ஜோஸ் கே.மணி, எம்.பி. (கேரளா காங்கிரஸ்)
பி.எம்.ஏ. சலாம், ஐ.யு.எம்.எல். (IUML) பொதுச் செயலாளர்
என்.கே.பிரேமச்சந்திரன், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி
ஆந்திரா:-
மிதுன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.
தெலங்கானா:-
முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி
கே.டி.ராமாராவ், பி.ஆர்.எஸ்.
வினோத் குமார், பி.ஆர்.எஸ்.
ஒவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சி
கர்நாடகா:-
டி.கே.சிவகுமார், துணை முதல்-மந்திரி
மேற்கு வங்கம்:-
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
முகமது சலீம் (சிபிஎம்)
சுபாங்கர் சர்கார் (காங்கிரஸ்)
ஒடிசா:-
பிஜு ஜனதா தளம்
பக்த சரண் தாஸ், காங்கிரஸ்
பஞ்சாப்:-
முதல்-மந்திரி பகவந்த் மான், (ஆம் ஆத்மி)
அமரிந்தர் சிங் வாரிங், (காங்கிரஸ்)
பல்விந்தர் சிங், (அகாலி தளம்)
தல்ஜித் சிங், (அகாலி தளம்)