தைவானில் கட்டுமான பணியிடத்தில் பயங்கர தீ விபத்து- 9 பேர் உயிரிழப்பு

4 weeks ago 4

தைபே:

தைவானின் மத்திய பகுதியில் உள்ளது தாய்சங் நகரில் பிரபல சூப்பர் மார்க்கெட்டின் உணவு பதப்படுத்தும் பிரிவுக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 5 தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் இன்று தீப்பற்றியது. பின்னர் மளமளவென வேகமாக பரவி தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த கட்டிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். சிலர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். மறுபுறம் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்றது.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. ஆனால் தீப்பற்றிய தளத்தில் அதிக அளவு பஞ்சு பேனல்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article