சின்னமனூர் : தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிடும் விதமாக சின்னமனூரில் இருந்து வெளியூர்களுக்கு செங்கரும்புகளை ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தேனி மாவட்டம், சின்னமனூரில் தைப்பொங்கல் திருநாளில் பொதுமக்கள் சுவைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாட ஸ்பெஷல் சாகுபடியாக செங்கரும்பு விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சின்னமனூர் பகுதியில் முல்லைப் பெரியாற்று பாசனத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் அளவில் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடக்கிறது. முல்லைப்பெரியாற்று பாசன நீரில் பல்வேறு மூலிகைகளுடன் கலந்து செம்மண்ணின் செழிப்புடன் தனிச்சுவையில் வளரும் செங்கரும்பு தமிழகத்தில் முதன்மை பெற்றதாக விளங்குகிறது.
அதோடு இதில் சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவிலிருந்து சிவகாமியம்மன் கோயில் பகுதி, மார்க்கையன் கோட்டை சாலை, செங்குளம், உடையகுளம், கடந்து சீலையம்பட்டி நுழைவு வரையில் செங்கரும்பு தனி விவசாயமாக சாகுபடி செய்கின்றனர்.
அதன்படி கடந்த சித்திரை மாதம் வயல் வெளிகளை விவசாயிகள் டிராக்டர் மூலமாக மண்ணை புரட்டி போட்டு நீண்ட வரிசையில் பாத்தி கட்டி கரும்பு கனைகளை விதைகளாக ஊன்றி விதைத்து 10 மாதங்களில் மிகவும் சிரத்தையுடன் பல்வேறு சிரமங்களுக்கிடையே வளர்த்தனர். மேலும் பருவ கால சூழ்நிலைகளும் விவசாயிகளுக்கு கை கொடுத்ததால் தொடர்ந்து ஒரு ஏக்கருக்கு சுமார் 2 லட்சம் வரையில் செலவு செய்து செங்கரும்புகளை வளர்த்து நல்ல அமோக விளைச்சலை கண்டுள்ளது.
சின்னமனூரில் அறுவடை செய்யப்படுகின்ற செங்கரும்பு தேனி, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருநெல்வேலி, தூத்துகுடி, சேலம், காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த செங்கரும்பு பொங்கல் திருவிழா விஷேசத்திற்கு முக்கியத்துவமாக இருப்பதால் விரும்புவதால் அங்கெல்லாம் அனுப்பப்படுகிறது. இது போக வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் சின்னமனூரில் முகாமிட்டு விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்ய தயார் நிலையில் இருக்கிறது.
மேலும் தமிழக அரசு சார்பில் தை பொங்கல் திருநாளுக்கு ரேசன் கடைகள் மூலம் பொங்க ல் தொகுப்பு பொருட்களுடன் ஒ ரு முழு கரும்பு வழங்குவதற்கு ஒரு கரும்பு ரூ.27 என நிர்ணயம் செய்து 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.270 என 80 விவசாயிகளிடம் அதிகாரிகள் நேரடி கொள்முதல் செய்துவிட்டனர்.
மேலும் தைப்பொங்கலுக்கு ஒரு நாள் இருக்கும் நிலையில் கடந்த ஒருவாரமாக தீவிர அறுவடை துவங்கியதால் விவசாயி கள் விறுவிறுப்புடன் ஆங்காங்கே தொழிலாளர்களுடன் கொண்டு கரும்புகள் அறுவடை நடந்து வருகிறது.
தைப் பொங்கல் ஒரு நாள் இருக்கும் நிலையில் பல்வேறு வியாபாரிகள் தற்போது அவர்களின் ஊர்களுக்கு கரும்பு களை கொண்டு செல்ல லோடு கணக்கில் கொள்முதல் செய்து விறுவிறுப்பாக லாரிகளில் ஏற்றி தயார் படுத்தி வருகின்றனர். தற்போது கோயம்புத்தூர், சேலம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
சின்னமனூர் பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயி சேதுராம் கூறுகையில், ‘‘சின்னமனூரில் தமிழகமே எதிர்பார்க்கும் செங்கரும்பு விவசாயம் இங்கு தான் அதிகளவில் உள்ளது. முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் செங்கரும்பிற்கு கூடுதல் சுவையை தருவதாக இப்பகுதியினர் நம்புகின்றனர்.
இப்படியிருக்க ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் வரையில் செலவு செய்து அரும்பாட்டுடன் விளைவித்துள்ளனர். தைப்பொங்கலுக்கு இக்கரும்பு நடப்பாண்டில் அமோக விளைச்சல் கண்டுள்ளது.ஆனால் மண் ணில் மாற்றம் செய்யாததால் கரும்பின் பருமன் குறைந்துள்ளது.
ஓரளவுக்கு விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை அரசு நிர்ணயித்துள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் உழைப்பிற்கு ஏற்று லாபத்தை ஈட்டி உள்ளனர். கலந்த பல ஆண்டுகளைப் போல் பொதுமக்கள் கரும்புகளை மொத்தமாக வாங்குவதில்லை. அரசும் ரேஷன் கடைகளில் ஒரு கரும்பும் கொடுத்து விடுவதால் வாங்கும் வரத்து குறைந்துள்ளது’’என்றார்.
The post தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிட வெளியூர்களுக்கு ஏற்றுமதியாகும் செங்கரும்புகள் appeared first on Dinakaran.