தைப்பூசத்தையொட்டி இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

1 week ago 3

செங்கல்பட்டு: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் வள்ளலார் தினத்தில் வள்ளலார் இராமலிங்க அடிகளாரை வழிபடுவதும், அதேபோல் அன்றைய தினம் தைப்பூச திருவிழா என்பதால் முருகபெருமானுக்கு மாலை அணிவித்து விரதமிருந்து முருகன்வழிபாடு செய்வதும் வழக்கம்.

அந்தநாளில் தமிழகம் முழுவதும் மது விற்பதற்கு அரசு தரப்பில் தடைவிதித்து விடுமுறை அறிவிக்ப்பட்டு வருகிறது. ஆகவே, இன்று (11ம் தேதி) வள்ளலார் நினைவு நாள் மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மதுபானக்கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமான இதர வழிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தைப்பூசத்தையொட்டி இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Read Entire Article