தேவாரம், ஜூலை 8: தேவாரம் மலையடிவார பகுதியில் மொச்சைக்காய் சாகுபடி குறைந்து வருகிறது.தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மலையடிவாரத்தில் உள்ள நிலங்களில் மொச்சைக்காய் பயிரிடப்படுவது வழக்கம். இதற்கு தோட்டங்களில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். மலையடிவாரத்தில் மழை பெய்யும் போது, தண்ணீரும் கிடைக்கும் போது கூடுதல் விளைச்சல் கிடைக்கும். விவசாயிகள் இதனை நம்பி மலையடிவாரங்களில், மொச்சைக் காய் நடவு செய்வார்கள். ஆனால் தற்போது மொச்சைக்காய் சாகுபடி மலையடிவாரத்தில் குறைந்து வருகிறது. அதே வேளையில் தோட்டங்களில் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. ஆடி மாதம் தொடங்கிடும் போது, மொச்சைக்காய் விதைப்பது வழக்கம்.
காரணம் பருவம் தவறிய மழை, தற்போது அதிகரித்து வரும் சாரல் காரணமாக விவசாய தோட்டங்களில் மாற்று விவசாயமாக, மொச்சை உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பில் மொச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கைகொடுக்கக் கூடியதாக இருந்தாலும் மலையடிவாரத்தில் விளையும் மொச்சையை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இப்போதோ, சாரல் காரணமாக மொச்சைக்காய் அதிகம் பூக்கள் வைக்கிறது. இதில் மழையினால் பூச்சிகளும் அதிகரிப்பதால், தடுப்பு மருந்துகளை அடித்து வருகின்றனர்.
The post தேவாரம் மலையடிவாரத்தில் மொச்சை சாகுபடி தொடர்ந்து ‘டல்’ appeared first on Dinakaran.