தேவாரம், ஜன.21: தேவாரம் மலையடிவார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மானாவாரி சாகுபடி ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்டம், தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை ஓரளவு கிடைத்தது. இதனால் ஈரப்பதம் கிடைத்த நிலங்களில் காட்டு தக்காளி, எள், சோளம், உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இதற்காக பல இடங்களில், உள்ள விவசாய நிலங்கள், மற்றும் வேளாண்மை நிலங்களில் உழவடை பணிகள் நடைபெற்று விதைகள் பாவப்பட்டது.
இப்போது பயிர்கள் வளர்ச்சி கண்டுள்ளன. இதில் ஆணைமலையன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம் மலையடிவார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் மானாவாரி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பகுதிகளில் தற்போது மானாவாரி நிலங்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் நிலங்கள் உழவு செய்யப்பட்டு விதைப்புக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
The post தேவாரம் பகுதியில் மானாவாரி நிலங்களில் விவசாய பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.