தேவகோட்டையில் பல ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்: டிஎஸ்பி நடவடிக்கை

4 weeks ago 7

தேவகோட்டை: தேவகோட்டையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலேயே இருந்தன. இதன் காரணமாக தேவகோட்டை ராம்நகர், ஆண்டவர் செட் நான்கு வீதிகள், அரசு மருத்துவமனை பகுதிகள், தியாகிகள் சாலை, சரஸ்வதி வாசகசாலை, பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகள், வாடியார் வீதி, பழனியப்பன் சந்து, கருதாஊரணி பகுதிகள், கண்டதேவி ஒத்தக்கடை பகுதிகள், வட்டாணம் ரோடு, சருகணி செல்லும் பாதை, ஆற்றுப்பாலம் ஒத்தக்கடை, காந்தி ரோடு என நகரின் அனைத்து பகுதிகளும் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங்களால் ஆக்கிரமிப்புக்குள்ளாகின.

இதனால், பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தேவகோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கவுதம் கடந்த 3 நாட்ங்களுக்கு முன்பாக இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று முன்தினம் (டிச. 20) வரை கெடு விதித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நேற்று டிஎஸ்பி தலைமையில் போலீசார், நகராட்சி ஆணையாளர் தாமரை மற்றும் நகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜேசிபி இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவதோடு நின்றுவிடாது தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் நகர் வளர்ச்சியில் சிறப்படையும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

The post தேவகோட்டையில் பல ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்: டிஎஸ்பி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article