தேவகோட்டை.நவ.19: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், தேவகோட்டை தாலுகா பகுதிகள் முமுவதும் மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக நெற்பெயர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. ஆகையால் அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்தார்.
மேலும் அவர் பேசுகையில், தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக அனைத்து கண்மாய் குளங்கள் நிறைந்துள்ளன. இனிவரும் காலங்களில் மழை பெய்தால் கண்மாய் குளங்கள் உடைந்து வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் அரசுத்துறை அலுவலர்கள் எந்த நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பேசினார். கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜாத்தி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post தேவகோட்டை ஒன்றிய பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.