தேர்வில் தோல்வி பயம்: 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை

15 hours ago 5

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புண்ணிய மூர்த்தி என்பவரது மகள் ஆர்த்திகா. பாபநாசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா, பொதுத்தேர்வு எழுதியுள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன.

இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் ஆர்த்திகா வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாபநாசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், வந்த போலீசார் ஆர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வில் தோல்வி பயம் காரணமாகத்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article