தேர்தல் விளம்பரம் செய்த விவகாரம் திமுக எம்எல்ஏ மீதான வழக்கு சென்னை ஐகோர்ட் ரத்து

4 weeks ago 6

சென்னை: 2019ம் ஆண்டு தேர்தலின்போது கமுதி காவல் ஆய்வாளர், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக விளம்பரத்தை அகற்ற காதர் பாஷா என்ற முத்துராமலிங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஆனால் அந்த விளம்பரத்தை அகற்றாமல் இருந்ததால் அவர் மீது பொதுசொத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கமுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை ரத்து செய்ய கோரி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காதர் பாட்சா தரப்பில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றும் தவறான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் வாதம் வைக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post தேர்தல் விளம்பரம் செய்த விவகாரம் திமுக எம்எல்ஏ மீதான வழக்கு சென்னை ஐகோர்ட் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article