தேர்தல் பரப்புரைக்கு இடையே உணவகத்தில் நுழைந்த டிரம்ப்: ஃபிரென்ச் ஃபிரை உணவைச் சமைத்து வாக்கு சேகரித்தார்

3 weeks ago 3

பென்சில்வேனியா: தேர்தல் பார்ப்புரையின் போது உணவகத்திற்குள் நுழைந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென உணவு தயாரிப்பில் இறங்கினார். அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் களம் காண்கிறார். பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த டிரம்ப், அங்கிருந்த மெக் டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்றார். திடீரென சமையல் செய்யும் பகுதிக்கு சென்ற அவர் உருளைக்கிழங்கை வைத்து தயாரிக்கப்படும் ஃபிரென்ச் ஃபிரை உணவை உற்சாகமாக சமைக்க தொடங்கினார்.

பின்னர் அதனை அட்டைப்பெட்டியில் அடைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர் விநியோகம் செய்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள காணொளியில், மெக் டொனால்ட்ஸ் நிர்வாகியிடம், எனக்கு வேலை வேண்டும். எனக்கு மெக் டொனால்ட்ஸ் கடையில் வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை என்று டிரம்ப் கேட்கிறார். பின்னர் பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்து, வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்து வாக்கு சேகரித்தார். அவரைக் காண ஆயிரக் கணக்கானோர் அங்கு திரண்டு வந்திருந்தனர்.

பொதுவாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேநீர் தயாரித்தும், பரோட்டா, இட்லி, தோசை சுட்டும் வாக்கு சேகரிப்பது வாடிக்கை. இந்த கலாச்சாரம் தற்போது கடல் கடந்து அமெரிக்கா வரை எட்டி இருப்பதாக சிலர் வியப்புடன் விமர்சனம் செய்கின்றனர்.

The post தேர்தல் பரப்புரைக்கு இடையே உணவகத்தில் நுழைந்த டிரம்ப்: ஃபிரென்ச் ஃபிரை உணவைச் சமைத்து வாக்கு சேகரித்தார் appeared first on Dinakaran.

Read Entire Article