தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் துவண்டுவிடாதீர்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

3 hours ago 3

சென்னை : தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் துவண்டுவிடாதீர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. முடிவுகளை www.tnresults.nic.in, https://results.digilocker.gov.in/ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சொன்னதுபோல கல்லூரிக் கனவு – உயர்வுக்குப் படி – சிகரம் தொடு – நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள் அடுத்து உங்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும்.பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்! “இவ்வாறு தெரிவித்தார்.

The post தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் துவண்டுவிடாதீர்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article