தேமுதிக காசு வாங்கும் கட்சியா? விஜயபிரபாகரன் ஓபன் டாக்

3 months ago 24

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது: எனது தந்தை விஜயகாந்த் கூட்டணி தர்மம் குறித்து எனக்கு கூறியுள்ளார். எனவே கூட்டணி தர்மம் கருதி, எடப்பாடி கூறினால், தமிழகம் முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக உள்ளேன்.

நாங்கள் காசு வாங்குகின்ற கட்சி. பேரம் பேசுகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால், நாங்கள் எப்பொழுதும் யாரிடமும் பேரம் பேசியதும் இல்லை. காசு வாங்கியதும் இல்லை. கடந்த 2005ம் ஆண்டு கட்சி மாநாட்டை எங்களது சொந்த செலவில்தான் நடத்தினோம். இன்று வரை அப்படித்தான் கட்சி நடத்தி வருகிறோம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கட்டும். இவ்வாறு பேசினார்.

The post தேமுதிக காசு வாங்கும் கட்சியா? விஜயபிரபாகரன் ஓபன் டாக் appeared first on Dinakaran.

Read Entire Article