தேனியில் மாநில அளவிலான கபடி போட்டி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்

1 day ago 5

 

தேனி, மே 28: தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை, முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதான உள்விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான ஏ கிரேடு ஆடவர், மகளிர் கபடி போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதனை நேற்று தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்பியுமான தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்லப்பாண்டியன், உயர்நீதிமன்ற வக்கீல் நிஷாந்த், தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, தேனி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் ராஜசேகர், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பாண்டியராஜ், பேரூராட்சி சேர்மன்கள் பூதிப்புரம் கவியரசு, மார்க்கையன்கோட்டை ஓ.ஏ.முருகன், முன்னாள் தேனி நகர பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட
வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, மாநில மீனவர் அணி நல்வாரிய உறுப்பினர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் மாநில அளவிலான கபடி போட்டி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article