தேனி, நவ. 30: தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே சிபிஎம் பற்றி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி தாலுகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, வணிகர்களின் பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியை விதித்த மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி தாலுகா குழு சார்பில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
The post தேனியில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.