தேனி: ஓசியில் இறைச்சி தர மறுத்ததால் மயானத்தில் 2 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டிக் கொண்டுவந்து இறைச்சிக் கடைக்கு முன்பு வீசிவிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டார். அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கண்டு மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கைது செய்யப்பட்ட குமார் என்பவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும் மயானத்தில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தவர் எனவும் தகவல் வெளியாகியது.
The post தேனியில் கடை முன்பு சடலத்தை வீசிவிட்டுச் சென்றவர் கைது..!! appeared first on Dinakaran.