தேனி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு

2 months ago 11

தேனி, நவ.22: மண் வளத்தை பாதிக்க செய்வதோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் வெகுவாக குறைத்து வரும் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மீறி பயன்படுத்தும் கடைகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு குறைந்து காணப்பட்டது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரிய ஜவுளி கடைகள், ஓட்டல் மற்றும் சிறிய பெட்டி கடைகள் வரையும் சாதாரணமாக பிளாஸ்டிக் பை பயன்படுத்துகின்றனர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியது, நீண்ட காலம் ஆனாலும் மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் புதைந்து மண் வளத்தை பாதிக்க செய்கிறது. மேலும் மண்ணின் மேற்பரப்பில் கிடப்பதால் மழை தண்னீர் பூமியின் உள்ளே புகாமல் நீர் ஆவியாகி விடுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இருப்பினும் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post தேனி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article