தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

3 months ago 13

 

தேனி, அக். 22: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் கிராமத்தை சேர்ந்த சின்னணன் மனைவி மாரியம்மாள்(55) என்பவர் வைத்திருந்த பையில் சுமார் ஒரு லிட்டர் அளவுள்ள பெட்ரோல் ஒரு கேனில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அப்பெண்ணை போலீசார் விசாரித்தபோது, தனது பூர்வீக நிலத்தை இவரது கிராமத்தை சேர்ந்த சிலர் அபகரித்து வைத்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் வந்து தீக்குளிக்க முயற்சித்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் பெண்ணை சமாதானப்படுத்தி மனுவை பெற்று திருப்பி அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த பெண்ணால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

The post தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article