தேனி, டிச. 11: தேனி அருகே பிசிபட்டியில் மின்கம்பம் மீது சரக்கு லாரி மோதியதில் மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. தேனி அருகே பிசிபட்டியில் பூதிப்புரம் சாலையில் தனியார் மில் உள்ளது. இந்த மில்லிற்கு சேலத்தில் இருந்து புண்ணாக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியானது, பிசிபட்டியில் உள்ள பூதிப்புரம் சாலையில் சென்றபோது, ஒரு சினிமா தியேட்டர் அருகே உள்ள ஒருமின்கம்பத்தில் லாரி மோதியது.
இதனையடுத்து, மின்கம்பம் சாய்ந்ததும், அருகே இருந்து மின்சார டிரான்ஸ்பார்மரும் சாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த பழனிசெட்டிபட்டி பகுதி மின்சார வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் சேதத்தை பார்வையிட்டனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தேனி அருகே பிசிபட்டியில் லாரி மோதி மின்கம்பம் டிரான்ஸ்பர்மர் சேதம் appeared first on Dinakaran.