தேசிய மாணவர் படை தினத்தையொட்டி போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை

2 hours ago 2

சென்னை: தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு போர் வீரர்கள் நினைவிடத்தில் லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் மரியாதை செலுத்தினார். உலகிலேயே மிகவும் பெரிய இளைஞர் அமைப்பாகிய என்சிசி அமைப்பு கடந்த 1948-ம் ஆண்டு நவம்பர்24-ம் தேதி உருவாக்கப்பட்டது.

அதன் 76-வது ஆண்டுவிழா கொண்டாடும் விதமாக சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாண்டு வாத்தியம் முழங்க மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் உள்ளடக்கிய என்.சி. சி அமைப்பின் துணை தலைமை இயக்குநர் கமொடோர் எஸ்.ராகவ், என்.சி.சி கமாண்டர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.  முன்னதாக, சென்னையை மையமாகக்கொண்ட என்சிசி 13-வது பட்டாலியன் இளம் வீரர்கள் குழு, கம்பீரமான அணிவகுப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

The post தேசிய மாணவர் படை தினத்தையொட்டி போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article