சென்னை: கடந்த 2017ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் பீமா சிம்மா ஹிந்துபூர் என்பவர் விழுப்புரம் திட்ட செயலாக்க பிரிவில் பணியாற்றிய போது விழுப்புரம் நெடுஞ்சாலையில் உணவகம் அமைக்க அனுமதி தர ரூ.2லட்சம் லஞ்சம் கேட்டதற்காக அவர் மீதும், அவரது உதவியாளர் சரவணன் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பீமா சிம்மா ஆந்திரவில் சாலை மற்றும் கட்டடங்கள் துறையில் விஜயவாடாவில் 2013 முதல் 2017 வரை பணியாற்றி வந்த நிலையில் கூடுதலாக விழுப்புரத்தில் பணியமர்த்தப்பட்டதாகவும், அவரது உதவியாளர் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பணியில் சேர்க்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.
மேலும் விசாரணையில் புகார்தாரர் உணவகம் அமைக்க அனுமதி கோரிய போது பீமா சிம்மா நிலம் தொடர்பான ஆவனங்களை தனது உதவியாளரிடம் வழங்க கூறியுள்ளார். இதையடுத்து ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற போது அவர்கள் இருவரையும் சிபிஐ பொறி வைத்து கையும் களவுமாக பிடித்தது. கைது செய்த பின் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணைக்கு பின் இருவரும் குற்றம் செய்தது நிருபிக்கப்பட்டு, அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டது.
The post தேசிய நெடுஞ்சாலை ஆணைய முன்னாள் திட்ட இயக்குநருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.