ஆலந்தூர்: தேசிய திருத்தல தேவாலயமாக சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாடிகனின் இந்திய தூதர் அறிவித்துள்ளார். இயேசுவின் சீடரான தோமா 1523ல் பரங்கிமலையில் உயிர் நீத்தார். புனித தோமையார் மலை ஆலயம் சீரமைக்கப்பட்ட பின் வாடிகன் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரேலி திறந்து வைத்தார். பின்னர் தேசிய திருத்தல தேவாலயம் என்ற போப் ஆண்டவரின் அறிவிப்பை வாடிகன் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரேலி வெளியிட்டார். பின்னர் புதிதாக கட்டப்பட்ட மரியாளின் இணை ஆலயத்தை ஐதராபாத் பேராயர் அந்தோனி கார்டினால் பூலா திறந்து வைத்தார். புனித தோமையாரின் இணை ஆலயத்தை மும்பையின் முன்னாள் பேராயர் ஆஸ்வால்ட் கர்தினால் கிரேசியஸ் திறந்து வைத்தார். புணரமைக்கப்பட்ட ஆராதணை அறையை சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி திறந்து வைத்தார்.விசுவாச தோட்டத்தை புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மறை மாவட்டத்தில் உள்ள ஒரு ஆலயம் தேசிய திருத்தல தேவாலயமாக உயர்ந்ததை போற்றும் விதமாக நன்றி திருப்பலி நடந்தது.
புனித தோமையர் மலை தேவாலயம் தேசிய திருத்த தேவாலயமாக உயர்த்தப்பட்டதின் விழா மலரை வாடிகன் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரேலி வெளியிட தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் அப்பாவு பெற்று கொண்டார்.விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், நாசர், ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, எம்.எல்.ஏக்கள் இ.கருணாநிதி, முன்னாள் பேராயர் சின்னப்பா, செங்கல்பட்டு மறை மாவட்ட பேராயர் நீதிநாதன், புனித தோமையார் மலை பங்கு பேரவை தலைவர் சார்லஸ், மைக்கேல் மற்றும் ஜெர்மனி, போர்த்துகல், பிலிப்பின்ஸ் நாட்டு தூதுவர்கள், இந்திய ராணுவ பயிற்சி முகாமின் கமான்டென்ட், மற்றும் கிறிஸ்துவ மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
The post தேசிய திருத்தலமாக பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு: வாடிகன் இந்திய தூதர் அறிவிப்பு appeared first on Dinakaran.