மேலூர், ஏப்.3: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிளிங் போட்டியில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ஒரிசா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா, ஹைதராபாத் ஆகிய மாநிலங்களில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் சார்பில் மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிச்சன் மகன் பிரதீப் கலந்து கொண்டார்.
23 வயதுக்கு உட்பட்டோருக்கான சைக்கிள் போட்டியில் 8 மாநிலத்தை சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்றனர். இதில் பிரதீப் 18 கிமீ தூரத்தை 31 நிமிடத்தில் கடந்து, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பிரதீப் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சாலை விபத்தில் ஒரு கையை இழந்து, தற்போது சருகுவலையப்பட்டி கிராமத்தில் விவசாய வேலைக்கு சென்று வருகிறார். வருகின்ற ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாட செல்வதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சருகுவலையபட்டி கிராமத்தின் சார்பில் சைக்கிள் வீரர் பிரதீப்க்கு ஊருக்கு திரும்பும் போது, உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
The post தேசிய சைக்கிளிங் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மேலூர் விவசாயி appeared first on Dinakaran.