சென்னை: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (88) காலமானார். 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். 2013ம் ஆண்டு போப் பதவியில் இருந்து 26வது பெனடிக்ட் விலகியதை தொடர்ந்து பிரான்சிஸ் போப் ஆண்டவர் ஆனார்.
கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை மோசமாகவே இருந்தது. வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக போப் பிரான்சிஸ் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் வாடிகனில் உள்ள தனது வீட்டில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானதாக இன்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போப் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் தனது சமுக வலைதள பதிவில்:
கத்தோலிக்க திருச்சபையை பச்சாதாபம் மற்றும் முற்போக்கான மதிப்புகளுடன் வழிநடத்தி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நபரான போப் பிரான்சிஸின் மறைவுக்கு நான் மிகவும் வருந்துகிறேன்
அவர் ஒரு இரக்கமுள்ள மற்றும் முற்போக்கான குரலாக இருந்தார், அவர் போப்பாண்டவருக்கு பணிவு, தார்மீக தைரியம் மற்றும் ஆழ்ந்த பச்சாதாப உணர்வைக் கொண்டு வந்தார். ஏழைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தல், நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான அவரது வாதங்கள் கத்தோலிக்க உலகிற்கு அப்பால் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன.
அவர் விட்டுச் சென்ற மரபு, செயலில் இரக்கமும், மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையும் ஆகும் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.