சென்னை: சட்டத்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் திருச்சியை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளியான பேராசிரியர் எஸ்.ஏழுமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியில் இந்திய சட்டக் கல்வி வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றுத்திறன் கொண்ட பேராசிரியர் நியமிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய அம்சமாகும்.