தேசிய ஊரக வேலை திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி

2 months ago 8

திருப்பூர், பிப். 20: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட களப்பணியாளர்களான உதவி பொறியாளர்கள், பணிப்பார்வையாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கணினி உதவியாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு உதவி பொறியாளர் கார்த்திக் தலைமை தாங்கி பேசினார். மத்திய அரசு சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக புதிய செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. யுக்தாரா என்ற செயலி ஆகும். இதில் 100 நாள் வேலை திட்ட பணிகள் செயலி முலம் பதிவு செய்யவும், பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த, செயலி முலம் பதிவு செய்கிற பணிகள் தான் வரும் நாட்களில் செய்ய முடியும். எனவே, இதனை அனைவரையும் தொிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். அதன் பின்னர் யுக்தார செயலி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

The post தேசிய ஊரக வேலை திட்ட களப்பணியாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article