டெல்லி : பீகாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பட்ஜெட்டில் அடுத்தடுத்து அம்மாநிலத்திற்கு அறிவிப்புகள் வெளியாகின்றன. 2025-2026ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன்,
*மீன் உற்பத்தியை பெருக்க மீனவர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் –
*மொத்த ஏற்றுமதியில் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் ஏற்றுமதி 45% ஆக உள்ளது –
*ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்ய இலக்கு –
*7.5 கோடி சிறுகுறு தொழில் முனைவோர் பயனடையும் வகையில் புதிய இட்டம்.
*ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடனுக்கு மானியம்.
*5 லட்சம் எஸ்.சி.எஸ்.டி பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம் –
*7.7 கோடி விவசாயிகளுக்கு கிஷான் கிரடிட் கார்டு வழங்கப்படும் –
*தோல்பொருட்கள் உற்பத்தி துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
*தோல் மற்றும் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
*50,000 பள்ளிகளில் அட்டல் டிங்கரிங் ஆய்வகம் அமைக்கப்படும்.
*சிறு முதல் பெரிய தொழில் உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.
ஐஐடியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 100% அளவிற்கு உயர்ந்துள்ளது.
*கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடியில் 100% மாணவர் சேர்க்கை அதிகரிப்பு எனவும், 23 ஐஐடிகள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
*மேலும் அடுத்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் 10,000 புதிய இடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு
*மாநிலங்களை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.50 லட்சம் கோடி வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும், அனைத்து இந்திய மொழிப்பாடங்களையும் டிஜிட்டல் மையமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*மேலும் புதிதாக 3 ஏஐ திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*மேம்படுத்தப்பட்ட உதான் திட்டத்தின்கீழ் 120 புதிய வழிதடங்களில் விமான சேவை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. மேலும் பிகாரில் ஏற்கனவே உள்ள விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு. இதனால் 400 கோடி பயணாளிகள் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டித்து மத்திய அமைச்சர் அறிவிப்பு.
*மாநில அரசின் பங்களிப்புடன் சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தனியார் பங்களிப்புடன் மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும்
*புதிய வருமான் வரி திட்டம் மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்
*ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.
*பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்
*உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்
The post தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், புதிய விமான நிலையம் : பேரவைத் தேர்தல் எதிரொலியாக பட்ஜெட்டில் பீகாருக்கு குவியும் திட்டங்கள் appeared first on Dinakaran.