தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பளு தூக்கும் போட்டியில் 2-ம் இடம் பிடித்த வீரருக்கு கலெக்டர் பாராட்டு

1 week ago 4

ஊட்டி : உத்தரபிரதேசத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பளு தூக்கும் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற தும்மனட்டி அரசு பள்ளி விடுதி காப்பாளருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், குடிசை மாற்று வாரிய வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 147 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவம் மற்றும் பராமரிப்பு நிதியுதவியாக 6 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து வழங்கினார். மேலும் எமரால்டு பகுதி பொதுமக்கள் மற்றும் நோயாளர்கள் நலன் கருதி எமரால்டு அரசு மருத்துவமனைக்கு அவசியமாக தேவைப்படும் ஹரிசாண்டல் ஆட்டோ கிளவ் மெசின் கொள்முதல் செய்து வழங்க தேவையான ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்து 500க்கான காசோலையை மருத்துவ பணிகள் இணை இயக்குநரிடம், கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயக்கும் தும்மனட்டி அரசு பள்ளி மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வரும் சரவணன் என்பவர் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மூலம் கடந்த மாதம் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடந்த தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு 59 கிலோ எடை பிரிவில் 146 கிலோ எடை தூக்கி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வௌ்ளி பதக்கம், டெல்லி ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2-வது கேலோ இந்தியா பாரா பளு தூக்கும் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெள்ளி பதக்கம் பெற்றதை தொடர்ந்து பதக்கம் மற்றும் சான்றிதழையும் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மாவட்ட வேலைவாய்பு அலுவலகம் மூலம் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்பட்டு வரும் இலவச போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகளில் பயன்பெற்று வரும் மாணவர்களுக்கு இலவச கையேடுகளை வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் சுப்பிமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

19. ஊட்டி மாாியம்மன் கோயில் திருவிழா ஹெத்தையம்மன் அலங்காரத்தில் திருத்தேர் பவனி கோலாகலம்

ஊட்டி : ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் படுகர் இன மக்களின் சார்பில் ஹெத்தையம்மன் அலங்காரத்தில் திருத்தேர் பவனி நேற்று வெகு விமா்சையாக நடைபெற்றது. படுகா் கலச்சார நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோயில் விளங்கி வருகிறது.

இக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். ஊட்டி மாாியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு மாதம் நடக்கும் இத்திருவிழாவின் போது, ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்த மக்களும் தங்களது பாரம்பரிய முறைப்படி விழாக்களை நடத்துவர்.

ஒவ்வொரு நாளும் பல்வேறு அங்காலரங்களில் அம்மன் திருவீதி உலா நடக்கும். இதில், நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் சார்பில் நடத்தப்படும் தோ்பவனி விழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி கணபதி ஹோமம், பூச்சொரிதல், நவகலச பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. கடந்த 17ம் தேதி முதல் பல்வேறு சமூகத்தார் சார்பில் நாள்தோறும் ஆதிபராசக்தி, துா்க்கை, காமாட்சியம்மன், ராஜராஜேஷ்வாி, கருமாாியம்மன், சிக்கம்மன், கொடுங்களூர் பகவதி அம்மன், அங்காள பரமேஷ்வரி உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் தேர்பவனி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிாி மாவட்டத்தில் வசிக்க கூடிய படுகர் இன மக்களின் சார்பில் நேற்று தோ்பவனி ஊட்டியில் நடந்தது.

இதில் காமதேனு வாகனத்தில் ஹெத்தையம்மன் அலங்காரத்தில் அம்மன் பவனி வந்தாா். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான படுகா் இன மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினாா்கள். விழாவினை முன்னிட்டு படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தோ் ஊா்வலம் வரும் 15ம் தேதியன்று பகல் 1.55 மணியளவில் நடக்கிறது.

The post தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பளு தூக்கும் போட்டியில் 2-ம் இடம் பிடித்த வீரருக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article