தேசிய அளவில் நடந்த துப்பாக்கி சூடு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள்

3 months ago 19

 

சீர்காழி,அக். 8: உத்திரபிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்ற மாணவர்களை மயிலாடுதுறை எம்பி சுதா பாராடடினார். உத்திரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் தேசிய துப்பாக்கி சுடும் போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் பல்வேறு. நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் குணசேகரன் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதாவை டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சிறப்பாக துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டுக்களும், சர்வதேச அளவில் நடக்க இருக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துவதாக எம்பி சுதா தெரிவித்தார்.

 

The post தேசிய அளவில் நடந்த துப்பாக்கி சூடு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article