செங்கோட்டை,ஜன.5: தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவி வெள்ளி பதக்கம் வென்றார். தமிழ்நாடு உள் அரங்க வில்வித்தை அமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டத்தில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி கிருத்திகா, 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் தேசிய அளவில் இரண்டாமிடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
The post தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவிக்கு வெள்ளி பதக்கம் appeared first on Dinakaran.