தேசிய அளவிலான கருத்தரங்கில் ரோகிணி கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்

3 months ago 16

 

அஞ்சுகிராமம், அக். 21: தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் அஞ்சுகிராமம் அருகேயுள்ள ரோகிணி பொறியியல் கல்லூரி பயோமெடிக்கல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் காகித விளக்கக்காட்சியில் மூன்றாம் ஆண்டு மாணவி அனுஷ்யா மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் இரண்டாம் பரிசையும், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஷிவேஷ் மற்றும் டெலன் ராம் ஆகியோர் மூன்றாம் பரிசையும் வென்றனர்.

புதையல் தேடுபவர்கள் போட்டியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அனுஷ்யா முதல் பரிசையும், டெலன் ராம், சூரியபிரபா மற்றும் ஜெமிஷா இரண்டாம் பரிசையும் பெற்றனர். ஸ்னாப்ஷாட் போட்டியில் அல்குவாம் முதல் பரிசையும், வண்ணமில்லா ஓவிய போட்டியில் ஷிவேஷ் மற்றும் டெலின் ராம் இரண்டாம் பரிசையும் வென்றனர்.

தேசிய அளவிலான கருத்தரங்கில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்புடன் பரிசுகளை வென்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளெஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ், துறை தலைவர் பெனிஷா மற்றும் பயோ மெடிக்கல் பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.

The post தேசிய அளவிலான கருத்தரங்கில் ரோகிணி கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் appeared first on Dinakaran.

Read Entire Article