கோவை, பிப்.18: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு திறனறி போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஓவியம், கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவியருக்கு ‘காலநிலை மாற்றம்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி கோவை கொடீசியாவில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தன் ஓவியத் திறன்களை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, இன்று(18ம் தேதி) ‘காலநிலை நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், வரும் 19ம் தேதி பொது அறிவியல் வினாடி வினா போட்டி நடைபெருகிறது.
The post தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி appeared first on Dinakaran.