'தேசிங்கு ராஜா 2' அப்டேட் கொடுத்த நடிகர் விமல்

1 day ago 3

சென்னை,

நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 'பரமசிவன் பாத்திமா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் பிரபல இயக்குனர் எழில் இயக்கத்தில் 'தேசிங்குராஜா' நடித்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் அடுத்த பாகமான 'தேசிங்குராஜா 2' உருவாகி வருகிறது. அதே சமயம் தேசிங்கு ராஜா 2 படமானது முதல் பாகத்தில் இருந்து வித்தியாசமான கதைக்களத்திலும் முதல் பாகத்தை போல் காமெடி கலந்த கதைக்களத்திலும் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விமல் தவிர குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா போன்றோர் நடிக்கின்றனர்.

இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வித்யாசாகர் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், நடிகர் விமல் நேற்று ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து 'தேசிங்கு ராஜா 2' படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில், படத்திற்கான அப்டேட்டையும் பகிர்ந்துள்ளார். அதாவது, காமெடி கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படம் வருகிற கோடை கால விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.  

Read Entire Article