தேங்காய்ப் பால் ரெட் வெல்வெட் கேக்

3 weeks ago 5

தேவையான பொருட்கள்

தேங்காய்ப் பால் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
மைதா – 1 கப்
அரைத்த சர்க்கரை – 3/4 கப்
கோகோ பவுடர் – 1.5 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 கப்
ரெட் ஃபுட் கலர் – தேவையான அளவு.
க்ரீம் செய்வதற்கு
50 கி விப்புடு க்ரீம்
100 மில்லி குளிர்ந்த பால்.

செய்முறை

முதலில் தேங்காய்ப் பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து தனியே வைத்து கொள்ளவும். இதுவே கேக் செய்வதற்கான உடனடி பட்டர் மில்க். ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பவுடர் சுகர், எண்ணெய், வெனிலா எசன்ஸ் மற்றும் தனியே வைத்திருக்கும் பட்டர் மில்க் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையான அளவு ரெட் ஃபுட் கலர் சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து அடி கனமான பாத்திரத்தை வைத்து 15 நிமிடத்திற்கு ப்ரீ ஹீட் செய்யவும். பிறகு ஒரு வட்ட வடிவ பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை ஊற்றி பாத்திரத்தில் வைக்கவும். 30-40 நிமிடங்கள் கழித்து ஒரு டூத் பிக் வைத்து கேக்கின் அடி பாகம் வரை குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வருவதே கேக் தயாரான பதம். அடுப்பை அணைத்து கேக்கை ஆற விடவும். ஒரு பாத்திரத்தில் விப்புடு க்ரீம் மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து எலக்ட்ரிக் பிளண்டர் (அ) விஸ்கி(அ) ஸ்பூன் வைத்து நன்கு அடித்துக் கொள்ளவும். 5-10 நிமிடங்களுக்குள் க்ரீம் கிடைத்து விடும். இதை ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து விருப்பம் போல் கேக்கை அலங்கரித்துக் கொள்ளவும். ரெட் வெல்வெட் கேக் தயார்.

The post தேங்காய்ப் பால் ரெட் வெல்வெட் கேக் appeared first on Dinakaran.

Read Entire Article