ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பலமிருந்தும் பயத்தில் ஒதுங்கியதா பாஜக?

2 hours ago 1

அதிமுக-வுடன் சேர்ந்து பாஜக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்​தேர்​தலிலேயே பாஜக வேட்பாளர் நிறுத்​தப்​படலாம் என பேச்சு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிக் கொண்டது பாஜக.

விக்கிர​வாண்டி இடைத்​தேர்​தலிலும் பாமக-வை களமிறக்​கி​விட்டு கப் சிப் ஆகிவிட்டது. ஆனால், இம்முறை ஈரோடு கிழக்கில் அண்ணா​மலையே போட்டி​யிடலாம் என்ற செய்தி ஆரம்பத்​திலேயே அடிபட்டது. களத்தில் அதிமுக இல்லை என்றதும், அண்ணாமலை இறங்கினால் ஆடிப் பார்த்து​விடலாம் என்ற பேச்சுக்கள் இன்னும் பலமாக ஒலித்தன.

Read Entire Article