தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ பெண்களுக்கு பாலியல் தொல்லை: நடவடிக்கை கோரி போராட்டம்

6 months ago 33

திருமலை: ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், திருவூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் கோலிகபுடி சீனிவாச ராவ். இவர் பெண் ஊழியர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அவரை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து நீக்கும்படி சித்தேலோவில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ கோலிகபுடி சீனிவாச ராவ், தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் கைது செய்து தண்டணை கொடுக்க வேண்டும். இல்லையெனில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கூறி உண்ணாவிரதம் இருந்தார். முதல்வர் சந்திரபாபு நாயுடு போன் செய்ததால் தனது உண்ணாவிரதத்தை பாதியில் கைவிட்டு சென்றார்.

The post தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ பெண்களுக்கு பாலியல் தொல்லை: நடவடிக்கை கோரி போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article