தெலுங்கில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் சமந்தா

5 hours ago 3

சென்னை,

கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. 'பானா காத்தாடி' படத்தின் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். அதனையடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தெலுங்கு மொழியில் இவரது நடிப்பில் வெளியான சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய 2 படங்களுமெ போதுமான ரீச் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சமந்தா இயக்குனர் பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இவரது இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான 'ஜபர்தஸ்த், ஓ பேபி' ஆகிய படங்களை வெற்றி படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்ட நந்தினி ரெட்டி, 'சினிமாவில் பெண்கள்' என்கிற தலைப்பில் பேசும்போது மீண்டும் சமந்தாவுடன் இணைந்து அடுத்த படம் செய்கிறேன் என கூறியுள்ளார்.

Read Entire Article