ஐதராபாத்,
நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'காந்தாரா'. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் 'பஞ்சுருளி' என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இதில் கதாநாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தனர்.
தற்போது இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்தசூழலில், நடிகை சப்தமி கவுடா நித்தின் நடிக்கும் தம்முடு படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன.
இப்படத்தை வேணு ஸ்ரீராம் இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு காந்தார புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.