தெலங்கானா: தெலங்கானாவில் 6 வயது சிறுவனை தாயார் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ராமதேவியின் கணவர் ஆஞ்சநேயர் வேலை நிமித்தமான பணிகளுக்காக துபாய் சென்று அங்கு பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ராமதேவி அவரது இளைய மகனை தினந்தோறும் அடித்து கொடுமை படுத்தி வருகிறார். இதனை அக்கம் பக்கத்தினர் சில நாட்களாக எச்சரித்தும் அவர் கண்டுகொள்ளாததால் அக்கம் பக்கத்தினர் இதனை விடியோவாக பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதனை பார்த்த போலீசார் உடனடியாக ராமதேவியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் நல வாரியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.போலீசார் ராமதேவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த பெண்ணுக்கு மனஅழுத்தம் உள்ளதா என்ற கோணங்களிலும் மருத்துவ சிகிச்சையுடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவரது கணவர் ஆஞ்சநேயருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
The post தெலங்கானாவில் 6 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தாய்: அதிர்ச்சி வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.