தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

3 months ago 21

ராஜபாளையம், அக்.8: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி இஎஸ்ஐ காலனியில் ஊராட்சி ஒன்றியத்தில் 15வது நிதி குழு மானியத்தில் ரூ.9,50,000 மதிப்பீட்டில் புதிதாக மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் திறந்து வைத்தார்.

மேலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள தெருக்களில் வாறுகால் மற்றும் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணிகளை உடனடியாக செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத் தலைவர் துரை கற்பகராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் நவமணி, ரேவதி, ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிராஜா மற்றும் கழக கிளை செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article