
தெருநாய்களை கட்டுப்படுத்த 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 இடங்களில் கருத்தடை மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடு மற்றும் கோழிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசின் பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, சுமார் 100 இடங்களில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.