தெரு நாய் கடி எதிரொலி சிறப்பு தடுப்பூசி முகாம்: மாநகராட்சி நடவடிக்கை

3 months ago 7

சென்னை: குழந்தை மற்றும் சிறுவனை தெரு நாய்கள் கடித்த சம்பவங்களின் எதிரொலியாக சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை வேளச்சேரி, பார்க் அவென்யூ பூங்கா அருகில் விளையாடிக் கொண்டு இருந்த 9 வயது சிறுவனை அங்குள்ள தெரு நாய் வலது காலில் கடித்தது.

இதேபோல் வேளச்சேரி, பாரதி நகர், பவானி தெருவில் 7 மாத குழந்தைக்கு பாட்டி உணவு ஊட்டிய போது தெரு நாய் குழந்தையின் வலது தொடையில் கடித்துள்ளது. சிறுவன் மற்றும் குழந்தைக்கு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிறுவன், குழந்தையை கடித்த தெரு நாயை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து இன கட்டுபாட்டு மையத்திற்கு கொண்டு சென்று, கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்து உள்ளனர். இதனை தொடர்ந்து, நேற்று சென்னை மாநகராட்சி 177, 178வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தினர். இதில் அந்த பகுதியில் சுற்றி திரிந்த 107 தெருநாய்களை பிடித்து தடுப்பூசி போட்டதாக அதிகரிகள் தெரிவித்தனர்.

The post தெரு நாய் கடி எதிரொலி சிறப்பு தடுப்பூசி முகாம்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article