“தென்மாநில முதல்வர்கள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்” - அன்புமணி

1 week ago 2

சென்னை: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து தென் மாநிலங்களின் முதல்வர்களை தமிழக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசி, அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article