தென்னையை தாக்கும் வெள்ளை ஈ நோய்க்கு ஏன் மருந்து கண்டுபிடிக்கவில்லை..? பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வியால் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம்

2 weeks ago 5

தென்னையை தாக்கும் வெள்ளை ஈ நோய்க்கு ஏன் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் எழுப்பிய கேள்வியால் திமுக- அதிமுக இடையே காரசார விவாதம் நடந்தது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய மானிய ேகாரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக) பேசியதாவது: தென்னையில் ரூகோஸ் என்ற சுருள் வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக தென்னை விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை என்ன மருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்? ஒரு விவசாயம் அழிந்துக் கொண்டிருக்கிறது.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வு என்பதை பொறுத்தவரை உடனடியாக கண்டுபிடித்துவிட முடியாது. ஒரு ஆராய்ச்சி என்றால், 3, 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். ஒரு ஆராய்ச்சி செய்து நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அதற்கான காலங்கள் தேவை. நீங்கள் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது, அதை விட்டுவிட்டீர்கள். தங்களிடம் ஏதேனும் ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள். அது நல்லதாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறோம். அதை விடுத்து குற்றச்சாட்டாக கூறக்கூடாது.

பொள்ளாச்சி ஜெயராமன்: இப்போது மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றால் அது எப்போதும் முடியாது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லையென்றால் தென்னை விவசாயம் அடியோடு அழிந்து விடும். கொரோனா என்ற கொடிய நோய்க்கு கூட 20 நாட்களில் மருந்து கண்டுபிடித்து விட்டனர். தென்னையை தாக்கும் இந்த புதிய நோய் வந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த நோய் பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய மருந்தை கண்டுபிடிக்க வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு: எனது தோப்பிலுள்ள தென்னை மரங்களுக்கும் அதே வெள்ளை நோய் வந்தது. அதற்கு பிறகு அதிகாரிகளை வரவழைத்து, அவர்கள் ஒன்றிரண்டு மருந்துகளைச் சொல்லி, இப்போது கட்டுப்பாட்டுக்கு வந்திருக்கிறது. அதை நீங்கள் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறீர்கள். சந்தோஷம்.

The post தென்னையை தாக்கும் வெள்ளை ஈ நோய்க்கு ஏன் மருந்து கண்டுபிடிக்கவில்லை..? பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வியால் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article