சென்னை: 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர்,
*மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
*2025ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.53 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
* மாநில மகப்பேறு செவிலியர் பயிற்சி நிறுவனம், தேசிய பயிற்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
*அரசு மருத்துவமனைகளில் 25 புதிய போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை திட்டம் விரைவில் மதுரையில் தொடங்க திட்டம்
* டயாலிசிஸிக்கு உட்படும் அனைத்து நோயாளிகளுக்கும் புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும்.
* சிதலமடைந்த 1,823 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
*சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.147.00 கோடியில் பல்நோக்கு உயர்சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டப்படும்.
*4 அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன PET சி.டி.ஸ்கேன் சேவைகள் வழங்கப்படும்.
* கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ சாதனங்கள் சோதனைக் கூடம் நிறுவப்படும்.
* 44 அரசு சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டப்படும்
*கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரூ.125 கோடி மதிப்பில் உயர் சிறப்புச்சிகிச்சைக்கு புதிய கட்டடம் நிறுவப்படும் என்றும் அறிவித்தார்.
*போதை தரக் கூடிய மருந்து நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்.
* 4வது பொது சுகாதார சர்வதேச மாநாடு சேலத்தில் நடத்தப்படும் .
*ஓமந்தூரார் மருத்துவமனையில் ரூ.15 கோடியில் இதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள் நிறுவப்படும் .
* 75 புதிய அவசரகால ஊர்திகள், 38 இலவச அமரர் ஊர்திகள் உள்ளிட்டவை ரூ.26.71 கோடியில்
ஐநா சபையால் விருது பெற்ற திட்டம் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்
The post 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சி: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் appeared first on Dinakaran.