தென்னிந்தியாவில் முதல் உற்பத்தி ஆலையை தொடங்க டாபர் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்: ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைகிறது; 750 பேருக்கு வேலைவாய்ப்பு

1 month ago 3

சென்னை: தென்னிந்தியாவில் முதல் முறையாக உற்பத்தி ஆலையை ரூ.400 கோடியில் அமைக்க உள்ள டாபர் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பித்துள்ளது. தமிழ்நாட்டை 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசின் தொழில்துறை, பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன்படி பாக்ஸ்கான், டாடா மோடர்ஸ், ராக்வெல், ஐகியா போன்ற பல நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முக்கிய முதலீடுகளை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்றான டாபர் தமிழ்நாட்டில் முதலீட்டை செய்ய உள்ளது.

அந்த வகையில், வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது. சுமார் 750 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசுடன் கடந்த ஆகஸ்டு மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சுமார் 1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள டாபர் தொழிற்சாலையை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் டாபர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. விரைவில் அனுமதி பெறப்பட்டு தொழில்சாலையை நிறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என டாபர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்னிந்தியாவில் முதல் உற்பத்தி ஆலையை தொடங்க டாபர் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்: ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைகிறது; 750 பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article