தென்திருப்பேரை பெருமாள் கோவிலில் கருட சேவை

5 hours ago 2

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென்திருப்பேரையிலுள்ள ஶ்ரீ மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 11 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெற்று வருகிறது. காலையிலும் மாலையிலும் சுவாமி மற்றும் அம்பாள் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அவ்வகையில் நேற்று இரவு கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட வாகனத்தில் ஶ்ரீ நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் நான்கு ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாளை மறுநாள் (ஏப்ரல் 18) காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி புறையூர் ஆணையப்ப பிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடக்கிறது.

19ம் தேதி காலை 8.35 மணிக்குள் தேரோட்டமும், 20ம் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

Read Entire Article