தென்தாமரைகுளம் அருகே டிரான்ஸ்பார்மர் மீது மோதிய பள்ளி வாகனம்

3 months ago 19

தென்தாமரைகுளம், அக்.9: கன்னியாகுமரி அருகே சரவணந்தேரியில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ் மாணவர்களை ஏற்றிக் கொண்டு அகஸ்தீஸ்வரம், தாமரைகுளம், சாமிதோப்பு, கரும்பாட்டூர், மேலசந்தையடி வழியாக பள்ளிக்கு தினசரி செல்கிறது. அதன்படி நேற்று காலை சுமார் 8.15 மணிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. மேலசந்தையடி அருகே வந்த போது எதிர்பாராமல் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. பஸ் மோதியதில் டிரான்ஸ் பார்மர் 2 துண்டுகளாக உடைந்து விழுந்தது.இந்த விபத்தில் தனியார் பள்ளி பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக டிரைவர், மாணவர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் விபத்தில் துண்டான டிரான்ஸ்பார்மரை சீரமைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய தனியார் பள்ளி பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

The post தென்தாமரைகுளம் அருகே டிரான்ஸ்பார்மர் மீது மோதிய பள்ளி வாகனம் appeared first on Dinakaran.

Read Entire Article