தென்சீன கடல்பகுதியில் சீன கப்பலை விரட்டியடித்த இந்தோனேசியா

5 months ago 18

ஜகார்த்தா,

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென் சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளும் இந்த பகுதிக்கு உரிமை கோருகின்றன. இதனால் அந்த கடற்பகுதியில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

சர்ச்சைக்குரிய இந்த தென்சீனக்கடல் பகுதியில் இந்தோனேசிய கடல்சார் நிறுவனம் நில நடுக்கம் குறித்த ஒரு ஆய்வை நடத்தியது. அப்போது சீன கடற்படைக்குச் சொந்தமான ஒரு கப்பல் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டது. இது இந்தோனேசியாவின் ஆய்வில் சிக்கலை ஏற்படுத்தியது. எனவே அந்த சீன கப்பலை இந்தோனேசிய கடற்படையினர் அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் இரு நாடுகளின் உறவில் பதற்றம் நீடித்து வருகிறது.

Read Entire Article