
தென்காசி,
தென்காசி மாவட்டம் ஆவடையநல்லூர் சேர்ந்தவர் ராம்குமார், இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு வேலை ஒதிக்கீடு செய்ய மறுத்துவந்ததாக கலெக்டருக்கு மனு அளித்திருந்தார். அந்த மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
மேலும் ராம்குமாரின் ஒருஜினல் ஓட்டுநர் உரிம அட்டையை செங்கோட்டை அரசு போக்குவரத்துகழக அதிகாரி டிப்போவில் வைத்துவிட்டு தர மறுப்பதாக கூறியும் பல முறை மனு அளித்துவந்தார், இந்த மனுவுக்கான விசாரணைக்கு பின்னர் ஓர்ருநர் உரிமம் அட்டை காண வில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் 3 மாத காலமாக ஓட்டுநர் உரிமம் வழங்காமலும் பணி ஒதுக்காமலும் செங்கோட்டை அரசு கழக பனிமலை மேலாளர் தனக்கு மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் செல்போன் டவரின் மீது ஏறி போக்குவரத்து துறை அதிகாரியை கண்டித்து மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.